News September 25, 2024
மின்சார ரயிலில் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் இன்று காலை ஆந்திர மாநிலம் கடப்பா, திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சோதனை நடத்தினர். அப்போது ரயிலின் இருக்கை கீழே பதுக்கி வைத்திருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த அரிசி மூட்டைகளை அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் முத்துக்குமாரனிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
Similar News
News November 11, 2025
ராணிப்பேட்டை: சாலை விபத்தில் விஏஓ பலி!

ராணிப்பேட்டை: சக்கரமல்லூர் கிராம நிர்வாக அலுவலராக முத்துக்குமார்(42) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பைக்கில் செல்லும் போது ஸ்பீட் பிரேக்கரில் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று(நவ.11)அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் வருவாய்த்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 11, 2025
ராணிப்பேட்டை: வேலூர் இப்ராஹிமிற்கு கொலை மிரட்டல்!

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளரும் தேசிய செயலாளருமான வேலூர் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று(நவ.10) நள்ளிரவில் வேலூர் இப்ராஹிம் புகார் கொடுத்தார் .தொகுதியை விட்டு வெளியேறா விட்டால் கொலை செய்து விடுவோம் என்று போனில் மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இந்நிகழ்வில், அவருடன் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News November 11, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


