News March 25, 2025

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

image

ஊத்தங்கரை, மூன்றம்பட்டியில், பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் 5 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியதால் ஐந்து பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்த்திலேயே திமுக கிளைச் செயலாளர் ராமமூர்த்தி உயிரிழந்தார். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

Similar News

News March 26, 2025

இயற்கை அழகு நிறைந்த மேலகிரி மலைகள்

image

மேலகிரி மலைகள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதி ஆகும். பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற இந்த மலைகள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். மேலும், செல்லும் வழி எங்கும் பனி மூட்டம் சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் மேலகிரி மலைகள் வெளிநாடுகளுக்கு டிரக்கிங் செல்லும் அனுபவத்தை நமக்கு தருகின்றன. இந்த செய்தியை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 26, 2025

இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

image

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, BE, B.tech, முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.

News March 26, 2025

பர்கூர்:சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி,தேங்காய், கிரானைட் கற்கள் கொண்ட நகரமாகவும் ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும் வருவாய் ஈட்டி வரும்தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வரும் பர்கூர் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதால் சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக நகராட்சித்துறை அமைச்சா் அமைச்சர் நேற்று முன்தினம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!