News February 1, 2025

மின்சாரம் பாய்ந்து உணவக உரிமையாளர் உயிரிழப்பு

image

வானூா் வட்டம், நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் அதேபகுதியில் உணவகம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று (ஜன.31) மாவு அரைப்பதற்காக வீட்டிலிருந்த கிரைண்டரை அவர் போட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இதுகுறித்து வானூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

Similar News

News March 6, 2026

விழுப்புரம்: சனி தோஷம் நீக்கும் கல்பட்டு சனி பகவான்!

image

சனி தோஷத்தை நீக்கும் புகழ் பெற்ற கோயிலாக உள்ளது விழுப்புரம் மாவட்டம் கல்பட்டில் உள்ள சனீஸ்வரர் கோயில். இங்கு சனி பகவான் 21 அடி உயரத்தில் வலது காலை காகத்தின் மீது வைத்து காட்சி தருகிறார். ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News March 6, 2026

விழுப்புரம்: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

விழுப்புரம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*

News March 6, 2026

பள்ளி மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை ஆட்சியர் ஆய்வு

image

திருவெண்ணெய்நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ்,பள்ளி மாணவிகளுக்கு இரத்த பரிசோதனை நடைபெற்றது. இதை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி முன்னிலையில் இன்று (மார்ச்.06) பார்வையிட்டார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சா.செந்தில்குமார் உட்பட பலர் இருந்தனர்.

error: Content is protected !!