News December 12, 2025
மின்சாரம் பாய்ச்சும் தண்டர் ஸ்ரீலீலா

ஸ்ரீலீலா என்றாலே அவரது சிரிப்பும், நடனமும்தான் நினைவுக்கு வருகிறது. தனது நடனம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஸ்ரீலீலா, இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவரது, ஒவ்வொரு போட்டோவும் மதிமயங்க செய்கிறது. அவரது சிரிப்பும், அலையடிக்கும் பார்வையும் மனதைக் கவர்கிறது. இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
Similar News
News April 9, 2026
அண்ணாமலை அப்செட் ஆகல.. நிதின் நபின்

அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படாதது குறித்து அவரே விளக்கமளித்தும் ஓயாத விவகாரமாக தொடர்கிறது. இந்நிலையில், சீட் கொடுக்காததால் அண்ணாமலைக்கு எந்த வருத்தமும் இல்லை, அவர் தற்போது பிரசாரத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கூறியுள்ளார். MP தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் கொடுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
News April 9, 2026
3 மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு.. 9 மணி நிலவரம்

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், காலை 9 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 17.41%, கேரளாவில் 16.23%, அசாமில் 17.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் முறை வாக்காளர்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
News April 9, 2026
பிரசார களத்தில் குழந்தைகள்.. பொங்கும் சமூக ஆர்வலர்கள்!

தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என ECI அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும், ஒருசில பெற்றோர் தங்களது கட்சித் தலைவர் மீதான பற்றால் குழந்தைகளை வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரத்திற்கு அழைத்து செல்கின்றனர். இது ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். உதயநிதி, விஜய்யின் பிரசாரங்களில் குழந்தைகள் இடம் பெறுவது வாக்குக்கான அரசியல் என SM-ல் விவாதம் வெடித்துள்ளது.


