News March 23, 2025

மின்சாரம் தாக்கி 9ஆம் வகுப்பு மாணவி பலி

image

எர்ணாவூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அனிதா (14). அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று (மார்.22) இரவு ஈரக்கையால் செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பதறிய பெற்றோர், சிறுமியை தூக்கி கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஈரக்கையால் சுவிட்ச் அல்லது செல்போனை சார்ஜ் போடாதீர்கள்.

Similar News

News March 24, 2025

சென்னையில் புகழ்பெற்ற 7 சிவன் கோயில்கள்

image

1. கபாலீஸ்வரர் கோயில்- திருமயிலை, 2. மருந்தீஸ்வரர் கோயில்- திருவான்மியூர், 3. திருவல்லீஸ்வரர் கோயில்- திருவலிதாயம், 4.மாசிலாமணீஸ்வரர் கோயில்- திருமுல்லைவாயில், 5. தியாகராஜ சுவாமி கோயில்- திருவொற்றியூர், 6 .வேதபுரீஸ்வரர் கோயில்- திருவேற்காடு, 7. தேனுபுரீஸ்வரர் கோயில்- மாதம்பாக்கம். ஷேர் பண்ணுங்க.

News March 24, 2025

சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

image

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 24, 2025

கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 76.21% நீர் இருப்பு உள்ளதால், இந்த கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை மாநகருக்கு மாதம் தோறும் 1 டிஎம்சி குடிநீர் தேவைப்படும் நிலையில் தற்போது ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 8 டிஎம்சி குடிநீர் இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!