News June 25, 2024
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

பெரம்பலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, பவளக்கொடி தம்பதியினரின் மகள் நிகிதா(10). இவர் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனக்கு வயிறு வலிப்பதாக பள்ளி ஆசிரியரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்தவர் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
பெரம்பலூர்: திறனகம் எனும் சிறப்பு மையம் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் “திறனகம்” எனும் சிறப்பு மையங்களை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
News March 3, 2026
பெரம்பலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

பெரம்பலூர் மக்களே, <
News March 3, 2026
பெரம்பலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

பெரம்பலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


