News July 5, 2025
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனி சேர்ந்தவர் வெற்றிவேல் (41). இவர் கரூர் விநாயகர் கோவில் தெரு, ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வீடு கட்டுமானத்தில் சென்ட்ரிங் வேலை சக ஊழியர்களுடன் செய்து கொண்டிருந்தார். அப்போது இரும்பு கம்பி மேலே உள்ள மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கிதில் வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்டு கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
கரூர்: இலவச புகைப்படம் மற்றும் வீடியோ பயிற்சி

கரூரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவசமாக புகைப்படம் மற்றும் வீடியோப் பதிவு பயிற்சி வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 45 வயதிற்கிடையிலானோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News July 5, 2025
வங்கியில் அதிகாரி பணி: நல்ல சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <
News July 5, 2025
கரூரில் ITI அட்மிஷன்: ஜூலை 31 கடைசி நாள்

கரூர் அரசு ஐடிஐயில் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ.750 வழங்கப்படும்.மேலும் சீருடை, மிதிவண்டி, இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். இதற்கு 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி (ஜூலை 31) என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.விரிவான தகவலுக்கு 04324-222111 அழைக்கவும்.SHAREit