News April 7, 2025
மின்சாரம் தாக்கி டீக்கடைக்காரர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே நெல்லி விளையைச் சேர்ந்தவர் டைட்டஸ் (58). டீக்கடை நடத்தி வரும் இவர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு வரும் மின் ஒயரில் இணைத்து வைக்கப்பட்டிருந்த கம்பியில் கைபட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அருமனை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 9, 2025
கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

பண்டிகையை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சேலம், நாமக்கல், மதுரை வழியாக சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ. எண் 06089 ) ஏப்ரல் 10 &17 ஆகிய இரு தினங்களிலும் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி புறப்படும் மறுமார்க்கத்தில் (வ.எண் 06090 ) ஏப்ரல் 11 & 18 கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் என அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க
News April 9, 2025
குமரி மாவட்டத்தின் புவிசார் குறியீடு பெற்ற 3 பொருட்கள்

▶️மாறாமலை கிராம்பு (இந்தியாவில் மொத்த கிராம்பு உற்பத்தியில் 750 டன் குமரியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
▶️மட்டி வாழைப்பழம் (தென் திருவிதாங்கூர் மலைகளில் மட்டுமே வளரும் ஒரு அரிய வகை வாழை)
▶️ஈத்தாமொழி நெட்டைத் தென்னை (இந்த ரகத்தின் தேங்காய், 700கி.கி எடையும், எண்ணெய் சத்து அதிகமாக இருப்பதால், மதிப்பு கூட்டியும் விற்பனை செய்யலாம்) *தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
News April 9, 2025
தோவாளை : இன்றைய மலர்கள் விலை விபரம்

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்றைய (ஏப்.09) விலை நிலவரம். 1 கிலோ பிச்சி ரூ.1100, மல்லி ரூ.600, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.320, வாடாமல்லி ரூ.60, கிரேந்தி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.60, துளசி ரூ.30, பன்னீர் ரோஜா ரூ.150, மஞ்சள் செவ்வந்தி ரூ.240, வெள்ளை செவ்வந்தி ரூ.340, மரிக்கொழுந்து ரூ.70, தெத்தி ரூ.100 க்கும் விற்பனை செய்யப்பட்டது.