News March 27, 2025
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 25-ஆம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து மின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை இளவரசு மார்ச் 26-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 23, 2026
BREAKING: மணலூர்பேட்டை விபத்தில் மேலும் ஒருவர் பலி!

ஊளுந்தூர்பேட்டை அருகே மணலூர்பேட்டை பகுதியில் கடந்த ஜன.19ஆம் தேதி நடந்த ஆற்றுத்திருவிழாவில் ஹீலியம் பலூன் லிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பலூன் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
News January 23, 2026
கள்ளக்குறிச்சியில் இந்த எண்கள் அவசியம்!

1)மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
2)காவல்துறை கட்டுப்பாட்டு அறை: 100
3)விபத்து உதவி அழைப்பு எண்: 108
4)தீ அணைப்பு: 101
5)அவசர ஊர்தி அழைப்பு எண்: 102
6)குழந்தைகளுக்கான உதவி அழைப்பு: 1098
7)பேரிடர் உதவி அழைப்பு எண்: 1077
8)பாலியல் வன்கொடுமை தடுப்பு: 1091
9)BSNL உதவி அழைப்பு எண்: 1500
10)குடிநீர் சேவை எண்:1800-425-3566
11)ஆதார் சேவை எண்:1947
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 23, 2026
கள்ளக்குறிச்சியில் EB பில் எகுறுதா..?

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <


