News May 20, 2024
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

புதுச்சத்திரம் அருகே ரெட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்,மகன் கவின் குமார் நேற்று முன்தினம் காலை குளித்துவிட்டு வந்து,அவர் வீட்டில் உள்ள மின் மோட்டாரின் சுவிட்ச்சை ஈரமான கையுடன் தொட்டு,ஆப் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.அவரை மின்சாரம் தாக்கியது.தூக்கி வீசப்பட்ட கவின்குமாரை பெற்றோர் காப்பாற்றி சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
Similar News
News October 29, 2025
நாமக்கல் ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி

நாமக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக தினசரி இயங்கும் 17235 பெங்களூரூ – நாகர்கோவில் விரைவு ரயில் 29.10.2025 இன்றும், 17236 நாகர்கோவில் – பெங்களூரூ ரயில் 30.10.2025 நாளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News October 29, 2025
நாமக்கல்: பட்டம் படித்தால் வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு மையத்தில் Admin Supervisor, Accounts Supervisor, Marketing Supervisor, Hall Supervisor பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 55,000 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் பிண்ணப்பிக்க இங்கு <
News October 29, 2025
நாமக்கல்: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள் APPLY NOW!

நாமக்கல் மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!


