News December 21, 2024
மின்சாரம் தாக்கி ஐந்தாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அடுத்த தாவரகரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (35) விவசாயி. இவரது 10 வயது மகள் தாவரகரை அரசு தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று(டிச 20) காலை அவர் கழிவறை சென்ற போது கழிவறை அருகே இருந்த மின்வயரை தொட்டுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எனவே, போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை.
Similar News
News March 4, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
கிருஷ்ணகிரி: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <
News March 3, 2026
கிருஷ்ணகிரி: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: CLICK <


