News December 18, 2025
மின்கம்பியாள் தகுதி தேர்வு தேதி மாற்றம்!

திண்டுக்கல் கலெக்டர் சரவணன் செய்திக்குறிப்பில், மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண்தேர்வு டிச.13, 14 ல் நடைபெற இருந்த நிலையில் டிச.27, 28ல் கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், நடைபெறும். விண்ணப்ப தாரர்கள் அவரவர் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சிநிலையங்கள் மூலம் நுழைவுச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
Similar News
News December 20, 2025
ஒட்டன்சத்திரம் அருகே சோகம்: காவலர் உயிரிழப்பு

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே நீலமலைக்கோட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார். நேற்று மதியம் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News December 20, 2025
திண்டுக்கல்லில் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 16,09,553 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 78,4467, பெண் வாக்காளர்கள் 82,4921 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 165 பேர் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3,24,894 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
நத்தம் அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை

நத்தம் அருகே சீரங்கம்பட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள் (65) என்ற மூதாட்டி, நீண்ட நாட்களாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலக்குறைவால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


