News May 15, 2024

மினி ஸ்டேடியம் – 3 கோடியில் திட்டம்

image

மானாமதுரை திருப்பத்தூர் தொகுதிகளில் மாங்குளம் ,காரையூர் மினி ஸ்டேடியம் கட்ட இடம் தேர்வு செய்தனர். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. வருவாய்துறையிடம் இருந்து மாவட்ட விளையாட்டு ஆணையத்திடம் நிலங்களை ஒப்படைத்த பின், மினி ஸ்டேடியத்திற்கான கட்டுமான பணி துவங்கும். இங்கு 400மீ., ஓடுதளம் ,வாலிபால்,கூடைப்பந்து, கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கான
கட்டுமான வசதிகள் செய்யப்படும்.

Similar News

News January 26, 2026

BREAKING காரைக்குடி: முன்னாள் MLA காலமானார்

image

காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சுந்தரம் காலமானார். 1996 – 2001 மற்றும் 2006 – 2011 ஆண்டுகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றினார். இந்நிலையில், தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்ற போது, காரிலிருந்து இறங்கும் போது, தவறி விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 26, 2026

சிவகங்கை: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

சிவகங்கை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1. <>இங்கு க்ளிக்<<>> செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

News January 26, 2026

சிவகங்கை: அரிவாள் வெட்டு – 5 பேர் கைது

image

சாலூர் (ஜன 20) சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிகளை டூவீலரில் வந்த இளைஞர்கள் கேலி செய்தனர். இதை தட்டிக்கேட்ட சாலூர் இளைஞர்களை 14 பேர் கொண்ட கும்பல் அரிவாள், வீச்சரிவாளுடன் வந்து தாக்கினர். இதில் சாமிநாதன் என்பவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சாலூர் மக்கள் SP ஆபிஸில் புகார் அளித்தனர். நேற்று பாலசிவி, ராகுல்பாண்டி, பாண்டியராஜ், தினேஷ், கவுதம், ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!