News February 9, 2025
மினி பேருந்து விரிவாக்கத்திற்கான அரசாணை

சேலம் மாவட்டத்தில் பேருந்துகள் செல்லாத குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு பொதுமக்கள் நலனை கருதி தமிழக அரசு புதிய மினி பேருந்து விரிவாக்க திட்டம் 1-5- 2025 முதல் துவங்க உள்ளதாகவும் அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்க விரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
சேலம் ஜூலை 7 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஜூலை 7 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 10 மணி வாராந்திர குறைதீர் கூட்டம் (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்) ▶️காலை 10 மணி கோட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்பு ▶️காலை 11மணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம்▶️ மாலை 3 மணி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அமைச்சர்கள் பங்கேற்ப்பு
News July 7, 2025
சேலத்தில் நாளை இங்கு தான் மின் தடை

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ▶️ உடையாப்பட்டி துணை மின் நிலையம் ▶️மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் ▶️மல்லியக்கரை துணை மின் நிலையம் ▶️கருப்பூர் துணை மின் நிலையம் ▶️நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ். துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.SHAREit
News July 7, 2025
சேலத்தில் 13,450 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

சேலம் மாவட்டத்தில் உள்ள 9 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 13,450 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்கான தொகை ரூபாய் 33.07 கோடி, விவசாயிகளின் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரவை ஆலைகளுக்கும், சேமிப்பு கிடங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.