News May 14, 2024
மிதிவண்டிகளை வழங்கிய துணை காவல் கண்காணிப்பாளர்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வளர்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மோதிஷ் (488/500) மற்றும் அம்மனூரில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு நேற்று அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சுகந்தி வினோதினி மிதிவண்டிகளை வழங்கினர்.
Similar News
News July 10, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை.09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு (9884098100) அழைக்கலாம்.
News July 10, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 பேர் எழுதுகின்றனர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் 21,000 பேர் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பயன்பாட்டில் திறக்கவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News July 9, 2025
ராணிப்பேட்டையில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்டறியும் கூட்டம் (ஜூலை 10) நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இ-பிளாக்கில் முதல் தள கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். இதில் அனைத்து தொழில் நிர்வாகிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.