News September 6, 2024
மாஹே ஆற்றங்கரையில் புதுச்சேரி கவர்னர் ஆய்வு

அரச முறை பயணமாக இன்று மாஹே சென்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மாஹே ஆற்றங்கரையில் செயல்படுத்தப்பட்ட நடைபாதை மூன்றாம் கட்டப் பணிகளை பார்வையிட்டு அதன் பின்னர் மாஹி மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு அங்குள்ள மீனவர்களின் தேவைகள் குறித்தும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் விசாரித்தறிந்தார். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
Similar News
News September 15, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
புதுச்சேரி பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சட்டசபையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி மற்றும் காரைக்காலச் சார்ந்த 120 பத்திரிக்கையாளர்களுக்கு புதுச்சேரி அரசின் அங்கீகார அடையாள அட்டையை வழங்கி கௌரவித்தார் நிகழ்ச்சியில் செய்திதுறை இயக்குனர் முனுசாமி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
News September 15, 2025
காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

புதுச்சேரி அரசு துணை நிலை ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாதம் தோறும் 15 ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.