News November 23, 2025

மாஹி: கோ-கோ போட்டியை தொடங்கி வைத்த சபாநாயகர்

image

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அகில பாரத வித்யார்தி பரிக்ஷத் அமைப்பின் சார்பாக, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கேரள மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் மாஹி பிராந்தியத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தனராக கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

Similar News

News November 24, 2025

புதுச்சேரி: பள்ளி மாணவி திடீர் உயிரிழப்பு!

image

திருக்கனூர் சுதாகர் தொழிலாளி அவரது மகள் நிவிதா, அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை நிவிதா தனது தாயாரிடம் வயிறு வலிப்பதாக கூறியதால் குணசுந்தரி, நிவிதாவை திருக்கனூர் அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு வந்த நிவிதா, பின்னர் மாலை திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

News November 24, 2025

புதுச்சேரி: தேசிய புத்தக கண்காட்சி அறிவிப்பு!

image

புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்க நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 29வது தேசிய புத்தக கண்காட்சி வள்ளலார் சாலையில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில், அடுத்த மாதம் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டில்லி முதலான பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

News November 24, 2025

புதுச்சேரி: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!