News September 15, 2025
மாவட்ட மைய நூலகத்தில் சிறுவர்கள் கதை எழுத பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில், சிறுவர் கதை எழுதும் பயிற்சி இன்று நடைபெற்றது. அதற்கு வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். சிறுவர்களுக்கு, சிறார் எழுத்தாளர் கார்த்திகா, சிறுகதை எழுதுவதற்கான பயிற்சி அளித்தார். இதில் 5 முதல் 13 வயதுடைய சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Similar News
News September 14, 2025
யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு-II மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு-II இன்று திருச்சியில் 15 மையங்களில் நடைபெறுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வாசவி வித்தியாலயா பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News September 14, 2025
திருச்சி: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

திருச்சி மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 14, 2025
திருச்சி: மக்கள் நீதிமன்றத்தில் 5168 வழக்குகளுக்கு தீர்வு

திருச்சி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 12 அமர்வுகள் மற்றும் முசிறி, துறையூர், மணப்பாறை, லால்குடி, ஸ்ரீரங்கம், தொட்டியம் என மொத்தம் 22 அமர்வுகளில் பல்வேறு வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ரூ.57.37 கோடி மதிப்புடைய 5,168 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.