News March 26, 2024
மாவட்ட நிர்வாகம் சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் 100% வாக்குப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ள தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழ் போன்று தற்போது தேர்தல் திருவிழா அழைப்பிதழ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Similar News
News April 3, 2025
திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொணலவாடி கிராமத்தில் உள்ளது பச்சையம்மன் கோயில்.சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற ஆலயமாக உள்ள இங்கு வந்து அம்மனை வழிபட்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதனாலேயே மக்கள் அதிகளவில் இங்கு வந்து நம்பிக்கையோடு வழிபட்டு செல்கின்றனர்.தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க…
News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <
News April 3, 2025
கள்ளக்குறிச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, தேவபாண்டலம், சங்கராபுரம், அரும்பாக்கம், தாழனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?