News August 12, 2025
மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு பதிவு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க போக்குவரத்து துறையின் விழிப்புணர்வு பதிவு கார் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் போது தலை மற்றும் கையை வெளியில் நீட்ட வேண்டாம். முக்கியமாக குழந்தைகளை அழைத்து செல்லும் போது மிக கவனமாக அழைத்துச் செல்லவும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்புடன் கவனத்துடனும் பார்த்துக்கொள்ள வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
Similar News
News August 13, 2025
திருப்பத்தூரில் பயிற்சி வகுப்பு அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற (23.08.2025) அன்று முதல் 30 வாரங்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி நியூ டவுன் நகராட்சி பள்ளி, ஆம்பூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0416 2256166 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
News August 13, 2025
திருப்பத்தூர்: 10th போதும் அரசு வேலை!

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதும், சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் <
News August 13, 2025
தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள தூயநெஞ்ச கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 13) தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை கொண்ட மொழி அதனை மாணவர்கள் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.