News June 14, 2024
மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம்; சிஇஓ தகவல்

நெல்லை மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கான உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தகுதியான தலைமை ஆசிரியர்கள் தங்கள் விபரங்களை சரி பார்த்து கொள்ள வேண்டும் என்றும், திருத்தங்கள் ஏதாவது இருந்தால் உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்தை அணுக வேண்டும் என்றும் கூறினார்.
Similar News
News September 14, 2025
அடிக்கடி கவிழும் அரசு பஸ்கள்: தொழிலாளர்கள் கோரிக்கை

நெல்லையில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு அரசு பஸ்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வப்போது விபத்தில், சிக்குவது பிரேக் டவுன் ஆவது போன்ற நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்க பஸ்களின் எண்ணிக்கை அடிப்படையில் போதிய ஓட்டுனர், நடத்துனர்கள் நியமிக்க வேண்டும், பிஎஸ் 6 தொழில்நுட்ப பஸ்களை பராமரிப்பு செய்வதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களை பணிகளில் நியமிக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News September 14, 2025
நெல்லை முக்கிய ரயில் கோவையில் நிற்காது

சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நெல்லையிலிருந்து பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில்
(எண்: 22620) இன்று மட்டும் கோவையில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாடனூர், இருகூர் வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படுகிறது. கோவைக்கு பதிலாக பாடனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
நெல்லை மக்களே; ரூ.81,000 வரை சம்பளம்!

நெல்லை மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<