News October 21, 2025
மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் வீரவணக்க நாளில் உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் இன்று அக்.21 கருப்பு பட்டை அணிந்து அரசு மரியாதையுடன் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News January 31, 2026
கள்ளக்குறிச்சியில் வாகனங்கள் பொது ஏலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம், 26 இருசக்கர வாகனம் என 27 வாகனங்கள் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் நடைபெறும் பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 8 மணி முதல் பார்வையிடலாம் என்றும் மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார்.
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி

திருக்கோவிலூர் அருகே ஆடூர்கொளப்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் (19), கடந்த 27-ம் தேதி இரவு நண்பரை வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். சுந்தரேசபுரம் மேட்டு காலனி அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரின் பின்பகுதியில் பைக் மோதியதில், சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: நடுரோட்டில் பற்றி எரிந்த நபர்

கள்ளக்குறிச்சி மூரார்பாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி குமார் 2மனைவிகளும் பிரிந்து சென்ற கவலையில் இருந்த அவர் , திருப்பூர் நத்தக்கடையூரில் கூலி வேலை செய்து வந்தார். மனவேதனையில் இருந்த குமார், கடந்த 28-ம் தேதி முத்தூர்-காங்கயம் சாலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயமடைந்த அவர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


