News March 26, 2025
மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் காவல்நிலையங்களில் அளித்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 42 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
Similar News
News March 29, 2025
‘பெல்’ நிறுவனத்தில் வேலை; ரூ.84,000 சம்பளம்

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின்(BHEL)பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள்- 33, வயது வரம்பு: அதிகபட்சம் 32. கல்வி தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு. திட்ட இன்ஜினியர் பதவிக்கு ரூ.84,000 சம்பளம். <
News March 29, 2025
அம்மாவாசை முன்னிட்டு இங்கெல்லாம் சிறப்பு பூஜைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமாவாசை முன்னிட்டு, எங்கெல்லாம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இன்று அமாவாசை முன்னிட்டு கள்ளக்குறிச்சி காரனூர் ஓம் சக்தி அம்மன், கச்சிராயபாளையம் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி கோவில், முருகன் கோவில், வடக்கனந்தல் ஆவுடையார் கோவில், சிவன் கோவில், தியாக பாடிய அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
News March 29, 2025
இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக அன்பழகன் பணிபுரிகிறார். இவர், 6 மற்றும் 8ம் வகுப்பு வரையில், பாடம் நடத்திய போது, வகுப்பறையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து பெற்றோர் அவர் மீது புகார் தெரிவித்தனர். அன்பழகனை, சி.இ.ஓ., கார்த்திகா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.