News April 1, 2024
மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்

மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவின உச்சவரம்பு ரூ.
95 லட்சம் என்பதால் அந்தத் தொகைக்குள் செலவினங்களை வரைமுறைப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 15, 2025
மதுரையில் 3 மாதம் இலவச கணிணி பயிற்சி

மதுரை பெட்கிராட், அம்பேத்கார் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் M.S ஆபிஸ்பேக்கேஜ் அக்செஸ், சிஸ்டம் டூல் சூட், போட்டோஷாப், கோரல்டிரா பயிற்சியுடன் டைப்பிங் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி கற்றுத்தரப்படும். விவரங்களுக்கு 9344613237 அழைக்கலாம்.நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 14, 2025
JUST IN: மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் சிறையிலடைப்பு

மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கில் கைதான மேயர் கணவர் பொன்வசந்துக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் அவருக்கு ரத்த அழுத்தம் கூடியிருந்த நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 26 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
News August 14, 2025
மதுரையில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<