News September 9, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதுவை உருளையான் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்த சாலை, ஒதியன் சாலை போன்ற சில பகுதிகளில் குடிநீர் சம்பந்தமாக சில புகார்கள் வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் பொதுப்பணித்துறை, நீர் பாசனத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Similar News
News March 3, 2026
காரைக்கால்: மருத்துவர்கள் வருகை தேதி மாற்றம்

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வரும் 6.03.2026 (வெள்ளிக்கிழமை) காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதையொட்டி, அடுத்த வாரத்திற்கு (13.03.2026) வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
காரைக்காலில் இன்று மின்தடை அறிவிப்பு

காரைக்காலில் மின்னழுத்த பாதையில் இன்று (03.02.2026) வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News March 2, 2026
புதுச்சேரி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நாளை (03.03.2026) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் தேர்வுகள் இருந்தால் திட்டமிட்ட படி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


