News January 20, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ராஜபாளையம் வட்டாரம் சோழபுரம் முறம்பில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 40 பள்ளி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் என்ற 144 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
Similar News
News April 5, 2026
விருதுநகர்: பட்டாசு தொழில் செய்பவர்களுக்கு CM குட் நியூஸ்

விருதுநகர் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்ததும் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பசுமை பட்டாசு தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்றும், தொழிலாளர்களுக்கு தேவையான திட்டங்களை அரசு செய்து தரும் எனவும் பேசினார்.
News April 5, 2026
BREAKING விருதுநகர்: விஜயகாந்தை நினைவு கூர்ந்த ஸ்டாலின்..

விருதுநகரில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், ஒரு திரைப்படத்தில் வேட்பாளராக நின்ற விஜயகாந்தை ஆதரித்து வாக்குச் சேகரித்த நான், தற்போது அவரின் மகனுக்கு நேரடியாக வாக்குக் கேட்க வந்துள்ளேன், ‘மக்கள் ஆணையிட்டால்’ படத்தில், ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு.. என்ற பாட்டில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததை நினைவுகூர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து விஜய பிராபகரனுக்கு வாக்கு சேகரித்தார்.
News April 5, 2026
BREAKING விருதுநகர் காமராசர் மண் – முதல்வர் புகழாரம்

விருதுநகர் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றி வருகிறார். விருதுநகர் என்று சொன்னதும் காமராசர் தான் நினைவுக்கு வருவார் என்றும், விருதுநகர் காமராசர் மண் என முதல்வர் புகழாரம் சூட்டினார். காமராசருக்கு மெரினாவில் இடம் தர மறுத்ததாக EPS பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும், அவர் விளக்கமளித்து பேசி வருகிறார்.


