News March 26, 2024
மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு

திருவண்ணாமலை உழவர் சந்தையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (26.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியினை ஒட்டி, காய்கள் மற்றும் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கோலத்தினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News February 9, 2026
தி.மலையில் துடிதுடித்து பலி

வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (28). தனியாா் வங்கியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். அழிவிடைதாங்கி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தாா் அப்போது நண்பர் பற்குணுடனுடன் சோ்ந்து குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது செடி, கொடிகள் காலில் சுற்றியதால் விஜய் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.
News February 9, 2026
தி.மலை முழுவதும் நாளை முதல் வினியோகம்!

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி நாளை (பிப்.10) 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 72 ஆயிரத்து 235 பேருக்கு கிராம சுகதார செவிலியர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 9, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


