News November 25, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 409 மனுக்கள்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் 409 மனுக்களை அளித்திருப்பதாகவும், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்திருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகள் அறிவிப்பு

image

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் 3 சிறந்த பள்ளிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட விஜயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தாராபுரம் வட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட ஏரகாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாராபுரம் வட்டம் காரத்தொழுவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்வு பெற்றுள்ளன.

News November 11, 2025

குண்டு வெடிப்பில் 13 பேர் பலி: திருப்பூரில் சோதனை

image

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் எதிரொலியாக திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப், வெடிகுண்டு தடுப்பு பரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சோதனை (ம) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

திருப்பூர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள். ஊத்துக்குளி சப்பட்டை நாயகன் பாளையம் சமுதாய நல கூட்டத்திலும், உடுமலை வட்டாரம் மலையாண்டிபாளையம் சமுதாய நலக்கூடத்திலும் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் மனுக்கள் வழங்கி பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!