News April 11, 2024
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளித்தனர். இதில் தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த குடிமக்கள் 576,மாற்றுத்திறனாளிகள் 586 என மொத்தம் 1162 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
தேனியில் 296 கடைகளுக்கு சீல் வைப்பு

தேனி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 255 கிலோ கஞ்சா, 163 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 271 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புகையிலை விற்பனை செய்த 296 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.75, 25,000 அபராதம் விதிக்கப்பட்டு சுமார் 2042.86 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 35 குற்றவாளிகள் கைது செய்துள்ளனர் என தேனி எஸ்பி சினேகா சினேஹாபிரியா தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (ஆக.19) நீர்மட்டம்: வைகை அணை: 69.65 (71) அடி, வரத்து: 735 க.அடி, திறப்பு: 869 க.அடி, பெரியாறு அணை: 134.85 (142) அடி, வரத்து: 2769 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 38.80 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 46.14 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 49.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
News August 19, 2025
தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <