News November 14, 2024
மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய ஊர் பொதுமக்கள்

குமாரபாளையம் அப்புராயர் சத்திரம் பகுதியில் குடியிருப்போர் நூற்றுக்கு மேற்பட்ட மக்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு பகுதியில் தங்கியுள்ளதாகவும், வெளியேறுமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி,மீண்டும் அதே பகுதியில் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நேற்று ஊர் பொதுமக்கள் சார்பில் மனு வழங்கப்பட்டது.
Similar News
News November 13, 2025
நாமக்கல்லில் தனியார் நிறுவன ஷோரூமில் திருட்டு!

நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஷோரூமில் நேற்று இரவு 10:15 மணிக்கு மூடிய நிலையில் இருந்தது. இன்று காலை 9:15 மணிக்கு திறந்து பார்த்த போது, 4வது மாடியில் உள்ள மேற்கூரையை உடைத்து ஏணியை பயன்படுத்தி கீழே இறங்கி, தரைத்தள இருந்த ரூ.1,78,680 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 13, 2025
நாமக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாமக்கல் மாவட்டத்தில் மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ரங்கனூர் நான்குரோடு, புதுப்பாளையம், குட்டிக்கிணத்தூர், எலந்தகுட்டை, தாண்டான்காடு, மோகனூர், பேட்டப்பாளையம், கொளத்தூர், ஆரியூர், வளையப்பட்டி, கிடாரம், வாழவந்தி, ஓலப்பாளையம், பெரியகரசப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை நவ.14 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தகவல் தெரிவிப்பு .
News November 13, 2025
ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி ஒருவர் பலி!

ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலு வயது (60) மகன் ராஜமாணிக்கம். இவர் ராசிபுரத்தில் அமைந்திருக்கும் ஹோட்டலில் பல வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். அப்பொழுது சேலத்தில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக வேலுவின் மீது மோதியது. பேருந்து மோதியதில் வேலு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


