News August 11, 2025
மாவட்ட ஆட்சியரகத்தில் 370 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரடியாக பெற்றுக்கொண்டார். இதில் பட்டா மாறுதல், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தமாக 370 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 12, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் காரி பாரி மண்டபம், உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் காட்டுசெல்லூர் திறந்த வெளி மைதானம், சின்னசேலம் வட்டாரத்தில் தொட்டியம் டிசிஆர் மஹால், சங்கராபுரம் வட்டாரத்தில் விரியூர் திறந்த வெளி மைதானம், திருநாவலூர் வட்டாரத்தில் கெடிலம் வி.எஸ்.ஏ மஹால் உள்ளிட்ட இடங்களில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 11, 2025
பயனாளிகளுக்கு விவசாய நில கிரைய பாத்திரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தாட்கோ மூலம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின விவசாய பயனாளிகள் 3 பேருக்கு விவசாய நிலம் வாங்க 100 % இலவச பத்திரப்பதிவு கட்டணத்துடன் தலா ரூ.10 லட்ச திட்ட தொகையில் 5 லட்சம் மானியம் வீதம் 15 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டு மொத்தமாக 1.62 ஏக்கர் நிலம் கிரையம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட அசல் கிரைய பத்திரம் இன்று வழங்கப்பட்டது
News August 11, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.