News August 14, 2024

மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

image

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை 7401703484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்

Similar News

News February 26, 2026

தி.மலை: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

image

தி.மலை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 26, 2026

தி.மலையில் துடிதுடித்து பலி!

image

ஆரணியை அடுத்த கல்லூரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(58). கட்டட மேஸ்திரியான இவர், சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர், படுகாயமடைந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 26, 2026

அரணியில் தூக்கில் தொங்கிய பெண்!

image

ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 34). இவரது கணவர் மகேஷ்குமார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் இருந்த கவிதா நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். * தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.

error: Content is protected !!