News July 2, 2024
மாவட்ட அளவிலான போட்டி; முதல் பரிசு ரூ.10,000

நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் ஜூலை 9 காலை 9.30 முதல் ‘ஆட்சிமொழி தமிழ்’ தலைப்பில் கட்டுரை போட்டி, குமரி தந்தை மார்ஷல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும் நடைபெற உள்ளது என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.7,000, 3ம் பரிசாக, ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.
Similar News
News September 7, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
வியாபார தடையை நீக்கும் பஞ்சமுக விநாயகர்

நாமக்கல், பரமத்தி வேலூரின் மையப்பகுதியில் 1992ம் ஆண்டு கட்டப்பட்ட பஞ்சமுக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் ஆன 12 அடி உயர சிங்கத்தின் மீது அமர்ந்து கொண்டு 5 முகங்களுடன் கூடிய விநாயகர் பஞ்சமுக விநாயகராக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருமணத் தடை (ம) தொழில் தடை இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து தேங்காயில் விளக்கு ஏற்றி பிராத்தனை செய்துக் கொண்டால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.
News September 7, 2025
நாமக்கல்: PHONE காணவில்லையா உடனே செய்யுங்க!

நாமக்கல் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <