News January 4, 2025

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள்

image

ராணிப்பேட்டை  ஜி.கே பள்ளியில் இன்று குடியரசு தின விழா நீச்சல் போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை அதிகாரி துவக்கி வைத்தார்.  இப்போட்டியில் முதல் பரிசு பென்னாகரம் அரசினர் ஆண்கள் மே.பள்ளியும், 2வது பரிசு பாணாவரம் அரசு மே. பள்ளியும், 3வது பரிசு லாலாபேட்டை அரசினர் மே.பள்ளியும் வெற்றி பெற்றது. ஜி.கே பள்ளி நீச்சல் பயிற்சியாளர் சங்கரநாராயணன் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்தார்.

Similar News

News August 15, 2025

ராணிப்பேட்டை: காவல் அதிகாரிகளுக்கு விருது

image

இன்று (ஆகஸ்ட்-15) 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அய்மான் ஜமால் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, காவல் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 37 காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சக ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்கள் வழங்கப்பட்டது.

News August 15, 2025

ராணிப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

இராணிப்பேட்டை மாவட்டம் களியரசு (வயது 20) என்பவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக காவல் துறை நடவடிக்கை எடுத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 14.08.2025 அன்று கைது செய்யப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News August 15, 2025

ராணிப்பேட்டை: குழந்தை செல்வம் அருளும் முருகர் கோயில்

image

ராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி கீழ்மின்னல் பகுதியில் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14ஆம் காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்களும். இந்த கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசிப்பதின் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து குடும்ப வாழ்கை செழிப்போடு அமையும் என்பது ஐதீகம். உங்கள் நன்பர்களுக்கு பார்கிரவும்.

error: Content is protected !!