News November 14, 2024

மாவட்ட அளவிலான திருக்குறள் ஒப்பு வித்தல் போட்டி

image

போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நேற்று நடைபெற்றது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவிலான 20 பள்ளிகளைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவிகள் 75 பேர் பங்கேற்றனர். போட்டிக்கு நடுவர்களாக விஐடி பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்கள் இருந்தனர்.

Similar News

News November 19, 2024

திமலை கார்த்திகை மாத சோமவார 1008 சங்காபிஷேகம்  

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார தினமான நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News November 19, 2024

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு சிறை

image

வந்தவாசி தாலுக்கா வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (55) கடந்த 2019 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி நேற்று பெருமாளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News November 19, 2024

தி.மலையில் 616 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் தலைமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 616 மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் உத்தரவிட்டார்.