News July 8, 2024
மாவட்ட அளவிலான செஸ் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் லோட்டஸ் செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான ஒரு நாள் செஸ் போட்டி ஜூலை 14ம் தேதி செங்கல்பட்டில் உள்ள வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நடைபெற உள்ளது. பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில், 16 வயதுக்குட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 80502 85077, 99405 67200 மற்றும் 99400 58265 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 5, 2025
செங்கல்பட்டு மாவட்ட குறுவட்ட தடகள போட்டிகள்

செங்கல்பட்டு குறுவட்ட தடகளப் போட்டி இன்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குறுவட்ட தடகள போட்டிகளில் 34 பள்ளிகள் 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.
News August 5, 2025
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
News August 5, 2025
செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க