News March 1, 2025
மாவட்டத்தில் 37 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க முடிவு!

பொதுமக்களின் நலன் கருதி சேலம் மாவட்டத்தில் 37 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 16.25 கிலோ மீட்டர் தூரம் பேருந்து சேவை இல்லாத வழித்தடமாகவும், எட்டு கிலோமீட்டர் பேருந்து சேவை இருக்கும் வழித்தடமாகவும் இருக்கும் என சேலம் கோட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்.
Similar News
News March 1, 2025
டிகிரி போதும்..இந்திய அஞ்சல் வங்கியில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்படும் ‘இந்திய அஞ்சல் பேப்மெண்ட் வங்கியில்’ (India Post Payments Bank) உள்ள 51 நிர்வாகி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக தரப்படும். விண்ணப்பிக்க இங்கே <
News March 1, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வீட்டிலிருந்தே கைப்பேசி வாயிலாக தங்களுக்கு தேவையான வேளாண் எந்திரங்களை பெற்று பயனடையலாம் என வலியுறுத்தியுள்ளார். மேலும் கைப்பேசி வாயிலாகவே தேவைப்படும் நேரத்தில் வரவழைத்துக் கொள்ளலாம். அதற்குண்டான கட்டணத்தை கைப்பேசி வாயிலாகவும் செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
சேலத்தில் இன்றைய நிகழ்வுகள்

சேலத்தில் இன்று (மார்ச்.1) முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 8:30 தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொன்னம்மாபேட்டை பகுதியில் அன்னதானம் நடைபெறவுள்ளது. 2) காலை 9:30 மணி 2025-26 கல்வி ஆண்டிற்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மணக்காடு அரசு துவக்கப்பள்ளி துவக்கி வைக்கும் நிகழ்வு. 3) காலை 9 மணி காது, மூக்கு, தொண்டை இலவச பரிசோதனை முகாம் விவேகானந்தா மருத்துவமனையில் நடைபெறுகிறது.