News May 6, 2024
மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி E. S. W. மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தன்யா ஸ்ரீ என்பவர் 594 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இன்று முதலிடம் பிடித்த மாணவியை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 95.40 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. அதில் மாணவர்கள் 93.46%, மாணவியர்கள் 96.98 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News July 5, 2025
திண்டுக்கல்லில் மாபெரும் சமையல் போட்டி

திண்டுக்கல் மாவட்டத்தில் வதிலை எக்ஸ்பிரஸ் நடத்தும் மாபெரும் சமையல் போட்டி நாளை(ஜூலை 6) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தாடிக்கொம்பு ரோட்டில் அமைந்துள்ள விருதுநகர் நாடார் மஹாலில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம் . இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுதொகை வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு 95975 50786, 97886 81302, என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்
News July 5, 2025
திண்டுக்கல் மாணவர்கள் கவனத்திற்கு

திண்டுக்கல்: தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என முன்னாள் முதலமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி ’தமிழ்நாடு நாள்’. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜூலை 10ஆம் தேதி காலை 9.30 மணி முதல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
திண்டுக்கல்லில் இன்று மின் தடை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(ஜூலை 5) ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, தங்கச்சியாம்பட்டி, புலியூர்நத்தம், லெக்கையன் கோட்டை, வடகாடு மலைக்கிராமங்கள், அம்பிளிக்கை ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 3:00 வரையிலும், கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, வில்பட்டி, தாண்டிக்குடி, பெருமாள்மலை ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 2:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினருக்கு SHARE!