News January 20, 2025
மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை

பரந்தூரில் விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முழு தமிழ்நாடும் புதிய விமான நிலையம் வேண்டும் என்பதை விரும்புகிறது. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால், விஜய் முன்மொழியும் மாற்று இடம் எது? என்பதையும் அவரே கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.
Similar News
News August 23, 2025
காஞ்சிபுரம்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

காஞ்சிபுரம் மக்களே, இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? இதற்கு தமிழக அரசின் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
காஞ்சிபுரம்: 10ஆம் வகுப்பு போதும்! அட்டகாசமான அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை கீழ் இயங்கும் அச்சு மையங்களில் காலியாக உள்ள Junior Electrician, Assistant Offset Machine Technician, Junior Mechanic உள்ளிட்ட 56 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு ஏற்ப ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் உள்ள <
News August 23, 2025
காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஓரகடம் மற்றும் வெள்ளை கேட் பகுதிகளில் நேற்றிரவு (ஆகஸ்ட் 22) முதல் இன்று (ஆகஸ்ட் 23) விடியற்காலை வரை காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.