News April 28, 2025

மாற்றுப் பணியில் சென்று ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

image

மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் விடுத்துள்ள சுற்றறிக்கைபடி, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்று பணி மூலம் பணிபுரிய உத்தரவு பெற்று சென்ற அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் மீண்டும் சேர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News April 28, 2025

நெல்லை: உயிரழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த கார் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்.27) மாலை கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்.28) அறிவித்துள்ளார்.

News April 28, 2025

நெல்லை மாவட்டம் மழை நிலவரம் வெளியானது

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்றும் பல இடங்களில் மழை பதிவான நிலையில், இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் கொடுமுடியாறு அணை பகுதியில் 17 மி.மீ. மழையும் நம்பியார் அணை பகுதியில் 6 மி.மீ. மழையும் பாபநாசத்தில் 3 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

News April 28, 2025

நெல்லை: ரயில்வேயில் உடனடி வேலை

image

திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!