News October 25, 2024
மாற்றுத் திறனாளிக்கு சேவை செய்தோருக்கு விருது
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர்கள் சிறந்த சமூக பணியாளர்கள் அதிக அளவில் வேலை கொடுத்த நிறுவனங்கள் தொண்டுநிறுவனங்களுக்கு தங்க பதக்கம் சான்றிதழ் வழங்கப்படும். இது குறித்த விவரங்களுக்கு நாகை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் 28ந் தேதிக்குள் அறிந்து விண்ணப்பிக்க ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்
Similar News
News November 19, 2024
இ – சேவை மையங்களில் சான்று கட்டணம் நிர்ணயம்
இ – சேவை மையங்களில் பொதுமக்கள் பெறும் சாதி இருப்பிட சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளுக்கும் அதிக பட்சமாக ரூ.60-ம் முதியோர், விதவை உள்ளிட்ட ஓய்வூதிய சான்றுகளுக்கு ரூ.10-ம் திருமண உதவி திட்ட சான்றுகளுக்கு ரூ.120-ம், மின்கட்டணம் ரூ.1000 வரை ரூ.15ம் அதிகபட்சமாக ரூ.60 வரை மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; ஆட்சியர் தகவல்
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.11.2024 காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஐடிஐ, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்துக்கொள்ளலாம் என்று ஆட்சியர் ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வங்கக்கடலில் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் வரும் நவ.23-ஆம் தேதிக்குள் (சனிக்கிழமை) கரை திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.