News June 26, 2024
மாற்றுத் திறனாளிகள் தரையில் அமர்ந்து போராட்டம்

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஊராட்சி ஒன்றிய அலுவலகம். இன்று(ஜூன் 26) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் வடக்கு போலீசார் மாற்றுத்திறனாளிகளை சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
Similar News
News March 1, 2026
பழனி அருகே ‘பெண் பலி’ சிற்பம் கண்டுபிடிப்பு

பழனி அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பெண் (திருநங்கை) பலி’ சிற்பத்தை ஆய்வாளர் நாராயணமூர்த்தி கண்டறிந்தார். பாழடைந்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இச்சிற்பம், 1 திருநங்கை தனது தலையை தானே அறுத்து கடவுளுக்கு பலியிட்டு கொண்டதை சித்தரிக்கிறது. விலங்குகளை பலியிடும் வழக்கத்திற்கு மாறாக, இத்தகைய மனிதப் பலி மற்றும் திருநங்கை தொடர்பான வரலாற்றுச் சான்று தொல்லியல் ஆர்வலர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 1, 2026
திண்டுக்கல்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.
News March 1, 2026
திண்டுக்கல்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


