News August 4, 2024
மாற்றுத் திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்து சேவை

சென்னையில், மாற்றுத் திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்து சேவை இன்று (ஆகஸ்ட் 4) முதல் தொடங்கப்பட உள்ளன. சக்கர நாற்கலியுடன் எற இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாலையில் இருந்து பேருந்தில் ஏறும் உயரம் குறைவாக இருக்கும். தாழ்தள உயரத்தை இடதுபுறம் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்க ‘KNEELING’ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வேகத்தடை இல்லாத பிரதான சாலைகளில் மட்டுமே இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Similar News
News January 1, 2026
சென்னை: சிலிண்டரால் வந்த வினை!

விருகம்பாக்கம் நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர் (48) தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போது, கேஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில், வீடு திரும்பிய அவர் இதை கவனிக்காமல் டி.வி சுவிட்சை ஆன் செய்துள்ளார். இதனால் அறை முழுவதும் பரவி இருந்த கியாஸ் அதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த அதிர்வால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு நிகழவில்லை.
News January 1, 2026
சென்னையில் இன்று மழை வெளுக்கும்!

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லுங்க.
News January 1, 2026
சென்னை: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

வளசரவாக்கம், காமராஜ் அவென்யூ பகுதியை சேர்ந்த ஜோதிராஜ் மகன் வீரகுமார் (15) இவர் 8ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால், நண்பர் வீட்டுக்கு விளையாட சென்ற போது மாடி கைப்பிடி சுவர் அருகே சென்ற மின்கம்பியில் உரசியதில் அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல, டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


