News June 19, 2024

மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு உதவித்தொகை

image

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவகி என்பவர், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பேராத்ரோபால் போட்டியில் பங்கேற்க உள்ளார். எனவே அவருக்கு அறம் அறக்கட்டளை சார்பாக, போட்டியில் பங்கேற்கும் செலவினத் தொகையில் ஒரு பங்காக ரூ.10,000/ மொடக்குறிச்சி பா.ஜ.க., எம்.எல்.ஏ., சரஸ்வதி வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Similar News

News August 14, 2025

ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா

image

ஈரோடு: ஆனைக்கல்பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பும், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News August 14, 2025

ஈரோடு அருகே புதுப்பெண் தற்கொலை

image

ஈரோடு: கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் பூபதிக்கும் (37) அவரது மனைவி வினோதினிக்கும் (34) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று(ஆக.13) வினோதினி தாய்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 14, 2025

ஈரோட்டில் வங்கி வேலை வேண்டுமா? CLICK NOW

image

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(TMB)Probationary Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.72,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. (SHARE NOW)

error: Content is protected !!