News March 18, 2025

மாற்றுத்திறனாளி மகனை காய்கறி பெட்டியில் தூக்கி வந்த பெற்றோர்

image

விழுப்புரம் அடுத்த மேல்காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கேடேசன். இவரது மகன் கோவிந்தராஜ்(26), பிறவியிலேயே கை, கால் செயலிழந்த, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை கடந்த ஆறு மாதமாக நிறுத்தப்பட்டது. இதனால் விரக்தியடைந்த பெற்றோர் நேற்று, கோவிந்தராஜை, காய்கறி பெட்டியில் வைத்து மொபட்டில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக குறை கேட்பு கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

Similar News

News March 18, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க…

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக, குழந்தைகளுக்கு(6 மாதம் முதல் 6 வயது வரை) விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள், மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு, விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 – மார்ச் 22 வரை நடைபெறுகிறது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

அரசு மரியாதையுடன் போலீஸ் ஏட்டு உடல் தகனம்

image

கஞ்சா குற்றவாளியை பிடிக்க முயன்றபோது இறந்த தலைமை காவலரின் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விழுப்புரம் அடுத்த வளவனுார் தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவர், தொரவி கிராமத்தில், கஞ்சா கடத்தல் நபரை விரட்டிப் பிடிக்கச் சென்றபோது, மயங்கி விழுந்து நெஞ்சு வலியால் இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் அவரது குமாரகுப்பம் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

News March 18, 2025

இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!