News March 27, 2025

மாற்றுத்திறனாளிகள் முகாம் ரத்து – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள பயண சலுகை அட்டையினை வருகின்ற 30.06.2025 வரை பயன்படுத்தி, கட்டணமில்லா பயணச் சலுகையினை பெறலாம். மேலும் வருகின்ற 01.04.2025 மற்றும் 02.04.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

சிவகங்கை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

சிவகங்கை மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

News November 7, 2025

BREAKING சிவகங்கைக்கு அலர்ட் விடுத்த ஆய்வு மையம்

image

தமிழக உள் பகு​தி​களின் ​மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று முதல் நவ.11 வரை ஒருசில இடங்​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இந்நிலையில் இன்று விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் அலட்ர்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இது ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.

News November 7, 2025

சிவகங்கையில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமானது வருகின்ற 10.11.2025 அன்று சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து கூடுதல் விபரங்களுக்கு 04575 290625 என்ற தொலைபேசி எண்ணிலோ 9342192184, 8883458295, 9942099481 ஆகிய அலைபேசி எண்களிலோ அல்லது உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!