News August 14, 2024

மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கண் பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 20,21,22,23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மீனம்பாக்கம் முக்தி செயற்கை அவயவங்கள் நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. தகுதியுடையவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.

Similar News

News September 18, 2025

தாம்பரம் காவல்துறை விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் அனைத்து மகளிர் காவல்துறையினாரால்
வைஷ்ணவ கல்லூரியில் உள்ள மாணவியருக்கு காவல் உதவி செயலியின் நன்மைகள் மற்றும் பயன்பாடு, POCSO சட்டம் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் பாவனை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று
(செப் -18) நடத்தியது. ஏராளமான மாணவியர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

News September 18, 2025

செங்கல்பட்டு: பெரியாருக்கு முன்பே சமூக மாற்றம்

image

சாதிய முறைகளுக்கு எதிராக அம்பேத்கர், பெரியாருக்கு முன்பே சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர் இரட்டைமலை சீனிவாசன். 1860 ஜூலை 7ல் செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில் பிறந்து தமிழ்நாட்டில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம் பெற்ற முதல் தாழ்த்தபட்ட சமூக பிரதிநிதியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி ஆதிதிராவிட நலப்பள்ளிகள், விடுதிகள், உதவித்தொகை கிடைக்க செய்தார். இவரின் நினைவு தினம் இன்று.

News September 18, 2025

செங்கல்பட்டு: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

image

செங்கல்பட்டு மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!