News March 26, 2024
மாற்றுத்திறனாளிகள் பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் (மாா்ச் 26, 27) நடைபெறவிருந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததன் காரணமாக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
விழுப்புரம்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 2, 2025
விழுப்புரம்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு!

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 2, 2025
விழுப்புரம்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

விழுப்புரம் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.


