News October 4, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர்

தேனி மாவட்டத்தை உள்ளடக்கி வருகிற அக்.9ந் தேதி மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மண்டல அளவிலான வேலைவாய்ப்பு & தொழிற் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள, வேலைநாடும் மாற்றுத்திறனாளிகள் & வேலைவாய்ப்பளிக்க விரும்பும் நிறுவனங்கள், அக்.7 வரை, அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 05.30 மணி பார்க்கலாம்.
Similar News
News July 7, 2025
நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

தேனி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 10 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஒரு பயனாளிக்கு 4 வார வயதுள்ள 250 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படும். மொத்த தொகை ரூ.2,18,000. அதில் 50% மானியமாக அரசு ரூ. 1,09,000 வழங்கும். மீதி தொகையை பயனாளி செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தை அணுகலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணவும்.
News July 7, 2025
பெரியகுளம்: வழக்கறிஞரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பாலு. இவரது தம்பிகளான அழகுராஜா, சங்கருக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை ஏற்பட்டது. இதனை பாலு சமாதானம் செய்துள்ளார். இந்நிலையில் சங்கர் அவரது மனைவி சிந்தனைச்செல்வி சேர்ந்து வீட்டிலிருந்த பாலுவை அவதூறாக பேசி, கல்லால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தென்கரை போலீசார் சங்கர், சிந்தனைச் செல்வி மீது நேற்று (ஜூலை.6) வழக்கு பதிவு
News July 7, 2025
போடியில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

போடியில் 5வது வார்டு திமுக சார்பில் 10வது மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் விழா திமுக போடி நகர் செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட திமுக நகரச் செயலாளர் முதல் பரிசு 3000, 2ஆம் பரிசு 2000, 3ஆம் பரிசு 1000 வழங்கினார். மேலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள், பேனாக்கள், பென்சில் வழங்கப்பட்டது.