News January 7, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை முகாம்

image

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை 07.01.2026 முதல் 31.01.2026 (விடுமுறை தினத்தை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 6, 2026

ராம்நாடு மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

இராமநாதபுரம் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்<>கை க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 6, 2026

ராம்நாடு ஊரணியில் கிடந்த ஆண் சடலம்……!

image

இராமநாதபுரம், கமுதி அருகே பேரையூரை சேர்ந்த முதியவர் நாகநாதன் (60) என்பவர் கமுதி பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டி ஊரணி கரையில் சடலமாக கிடந்தார். இந்நிலையில் இவரின் உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுக்குறித்து முதியவரின் மகன் சதீஷ்குமார் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 6, 2026

ராமேஸ்வரம் மகா சிவராத்திரி திருவிழா ஆரம்பம்….!

image

ராமேஸ்வரம் ராமநாதபுரம் கோயிலில் மகா சிவராத்திரி கோயில் நிகழ்வு விபரம்
பிப்.8 – கொடியேற்றம்
பிப்.9 – சாமி அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளல்
பிப்.10 – சாமி வெள்ளி பூத வாகனம், அம்பாள் வெள்ளை கிளி வாகனம்
11 நாட்கள் வரை ஓவ்வொரு வாகனத்தில் சாமி மற்றும் அம்பாள் எழுந்தருளல் நிகழ்வு
பிப்.15 – மாசி மகா சிவராத்திரி நிகழ்வு
பிப்.16 – தேரோட்டம்
பிப்.8 முதல் பிப்.19 வரை 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

error: Content is protected !!